ADDED : மே 30, 2026 02:16 AM

- நமது நிருபர் -:
மழை காலம் என்றாலே சூடான டீ அல்லது காபியுடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட தோன்றும். இன்னும் சில வாரங்களில் மழை காலம் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக, ராகி பக்கோடா செய்து பாருங்கள். 'அம்புட்டு ருசியா' இருக்கும்.
தேவையான பொருட்கள்
l கேழ்வரகு மாவு - ஒரு கப்
l வெங்காயம்
நறுக்கியது - 1 கப்
l மிளகாய் - 5
l பெருங்காய துாள் - அரை டீஸ்பூன்
l கறிவேப்பிலை - சிறிதளவு
l உப்பு - சுவைக்கு ஏற்ப
l எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய வைத்துள்ள வெங்காயம், மிளகாய், பெருங்காயத்துாள், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து பக்கோடா பொரித்து எடுக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை எண்ணெய் உதிர்த்து விட்டு, பொரித்தால் போதும் ராகி பக்கோடா ரெடி!
