ADDED : ஜூன் 06, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரவேற்பு
என் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில், உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த முடிவை நான் வரவேற்கிறேன். அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். தேசிய அளவில் பெங்களூருக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.
பசவராஜ் ஹொரட்டி,
மேல்சபை தலைவர்
முதல்வர் பேரனுக்காகவா?
ஆர்.சி.பி.,யின் வெற்றி கொண்டாட்டத்தை துக்க நிகழ்வாக மாற்றியதற்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு. ஜமீர் அகமதுகான் மகன், ரிஸ்வான் மகன், முதல்வர் பேரன் ஆகியோர் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக விதான் சவுதா முன் விழா நடத்தப்பட்டு உள்ளது.
பிரதாப் சிம்ஹா,
முன்னாள் பா.ஜ., - எம்.பி.,.