/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 'மொபைல் செயலி' அறிமுகம்

/

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 'மொபைல் செயலி' அறிமுகம்

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 'மொபைல் செயலி' அறிமுகம்

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 'மொபைல் செயலி' அறிமுகம்


ADDED : மே 13, 2025 01:06 AM

Google News

ADDED : மே 13, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் மாணவர்கள் விண்ணப்பிக்க 'மொபைல் செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் கே.சி.இ.டி., எனும் கர்நாடக பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதன் அடிப்படையில் பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்கள் வீட்டின் அருகிலுள்ள கணினி மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதில், சில மாணவர்களின் விபரங்கள் தவறாக பதிவு செய்யப்படுகின்றன. இதனால், மாணவர்கள் கவுன்சிலிங்கின்போது நிராகரிக்கப்படுகின்றனர். இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

இதை கருத்தில் கொண்ட உயர் கல்வித்துறை, கே.இ.ஏ.,வுடன் இணைந்து, மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க 'மொபைல் செயலி' தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தது.

நேற்று அந்த மொபைல் செயலியை, உயர் கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மொபைல் செயலியில், தொழில்முறை படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்குபெற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதனால், கணினி மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய தேவையும் இல்லை. மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப பொறியியல் கல்லுாரிகளின் பட்டியல், அவற்றின் கட்டணம், பாடத்திட்டம், விடுதி கட்டணம் போன்றவற்றை அறிய முடியும். கல்லுாரி சேர்க்கை தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஒரு முறை விண்ணப்பித்தால் மட்டும் போதும். மீண்டும், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலியை மாணவர்கள், பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.