/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மார்ச் 25க்குள் பதிலளிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு

 மார்ச் 25க்குள் பதிலளிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு

 மார்ச் 25க்குள் பதிலளிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு

 மார்ச் 25க்குள் பதிலளிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு

 மார்ச் 25க்குள் பதிலளிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு

ADDED : மார் 19, 2026 06:32 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: மேல்சபைக்கு அமைச்சர்கள் வராதது குறித்து, அதிருப்தி தெரிவித்த சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மார்ச் 25 க்குள் பாக்கியுள்ள அனைத்து கேள்விகளுக்கும், பதில் அளிக்க வேண்டும் என, கெடு விதித்துள்ளார்.

மேல்சபை கேள்வி நேரம், நேற்று காலை துவங்கிய போது, அமைச்சர்கள் இல்லாததை கண்டு, பசவராஜ் ஹொரட்டி அதிருப்தி தெரிவித்தார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மார்ச் 25 க்குள், அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால், மறுநாள் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.

அமைச்சர் பரமேஸ்வர்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தாமதமாவதை தவிர்க்க, அரசு ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறை செயலருக்கு நோட்டீஸ் அளிப்பது, சஸ்பெண்ட் செய்வது என, பல நடவடிக்கை எடுத்துள்ளது. சபை தலைவரின் உத்தரவுப்படி, அரசு நடந்து கொள்ளும்.

ம.ஜ.த., - போஜேகவுடா: சபையில் இதுவரை 688 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் 400 கேள்விகளுக்கு பதில் வரவில்லை. கூட்டத்தொடர் முடிவதற்குள், பாக்கியுள்ள கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா.

பசவராஜ் ஹொரட்டி: பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, நீங்கள் (அமைச்சர் பரமேஸ்வர்) கூறுகிறீர்கள். ஆனால் அதிகாரிகள் பதில் அளிப்பது இல்லை. இத்தகைய அதிகாரிகள் மீது, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

பரமேஸ்வர்: நடவடிக்கை எடுக்கப்படும். துறை செயலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.