மரங்கள் பாதுகாப்பு வலியுறுத்தி பெங்களூரில் நாளை மாரத்தான்
மரங்கள் பாதுகாப்பு வலியுறுத்தி பெங்களூரில் நாளை மாரத்தான்
ADDED : மே 27, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: மரங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, பெங்களூரில் நாளை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்க உள்ளது.
'தி கிரீன் பாத்' என்ற அமைப்பின் சார்பில், மரங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நாளை மாரத்தான் ஓட்டம் நடக்க உள்ளது.
மல்லேஸ்வரம் 18வது கிராசில் உள்ள ராணி அம்மணி கல்லுாரி முன்பிருந்து, காலை 5:30 மணிக்கு மாரத்தான் ஓட்டம் துவங்குகிறது. 3, 5 மற்றும் 10 கி.மீ., என மூன்று பிரிவுகளில் நடக்கும் இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் பங்கேற்க விரும்புவோர் 99866 66778, 99162 38377 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
