sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மாஜி' காதலியை பார்க்க சென்று அடி வாங்கிய நபர் உயிரிழப்பு

 'மாஜி' காதலியை பார்க்க சென்று அடி வாங்கிய நபர் உயிரிழப்பு

 'மாஜி' காதலியை பார்க்க சென்று அடி வாங்கிய நபர் உயிரிழப்பு


ADDED : மே 28, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 02:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பேட்ராயனபுரா: முன்னாள் காதலியை சந்திக்க சென்று, அவரது கணவர் மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்டு, காயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

ராம்நகரின், பி.டி.காலனியில் வசித்தவர் முகமது காசிம், 27. இவரும், இதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணும், நான்கு ஆண்டு களாக காதலித்தனர் என கூறப்படுகிறது.

இவர்களின் காதலை ஏற்காத, பெண்ணின் பெற்றோர், பெங்களூரின், பேட்ராயனபுராவின், சாமண்ணா கார்டனில் வசிக்கும் வேறு ஒரு இளைஞருக்கு, திருமணம் செய்து கொடுத்தனர். அதன் பின் முகமது காசிம், தன் பணியை கவனித்து கொண்டு இருந்தார்.

இந்நிலையில் தன்னை சந்திக்க வரும்படி, முகமது காசிமுக்கு, முன்னாள் காதலி அழைத்தார். முகமது காசிமும், மே 25ம் தேதியன்று பெங்களூருக்கு வந்தார்.

சாமண்ணா கார்டனில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அவருடன் தனியாக பேசி கொண்டிருந்தார். இதை கண்டு கோபமடைந்த அவரது கணவரும், குடும்பத்தினரும் முகமது காசிமை கண் மூடித்தனமாக தாக்கினர்.

பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை செய்து கொள்ளாமல், ராம்நகரின் பி.டி., காலனியில் உள்ள தன் வீட்டுக்கு சென்று, படுத்து கொண்டார். வலி அதிகரித்ததால் குடும்பத்தினர் இவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி, நேற்று மதியம் முகமது காசிம் உயிரிழந்தார். இது குறித்து, பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us