ADDED : மே 12, 2026 11:31 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பராமரிப்பு பணி எதிரொலியாக கே.ஆர்.புரம் - குப்பம் மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
குப்பம் ரயில் நிலைய பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணிகள் எதிரொலியாக, பெங்களூரு கே.ஆர்.புரத்தில் இருந்து குப்பம் வரை செல்லும் மெமு ரயில் 66534, வரும் 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரையும்; 19 மற்றும் 20 ம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நாட்களில் பங்கார்பேட்டை வரை மட்டும் ரயில் செல்லும்.
இதுபோல குப்பம் - பங்கார்பேட்டை இடையே இயங்கும் மெமு ரயிலும் மேற்கண்ட தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
