/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தட்சிண கன்னடாவுக்கு வெப்ப எச்சரிக்கை
/
தட்சிண கன்னடாவுக்கு வெப்ப எச்சரிக்கை
ADDED : மே 03, 2026 11:23 PM
தட்சிண கன்னடா: 'தட்சிண கன்னடாவில், வெயில் அதிகமாக இருப்பதால், மதிய வேளையில் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' என, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.
மையத்தின் அறிக்கை:
கடந்த சில நாட்களாக, கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. தட்சிண கன்னடாவில் வெப்பம் கடுமையாக உள்ளது. வரும் நாட்களில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எனவே, மதிய வேளையில் யாரும் தேவையின்றி தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
மாவட்டத்தின் கடபா, புத்துார் தாலுகாக்களில், வரும் நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும்.
பெ ற்றோர், குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்வதை தவிர்க்கவும். அதிகமாக நீர் குடிக்க வேண்டும். வெயிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

