ADDED : ஜூன் 06, 2026 11:37 PM
அ நிறம் | அளவு
ஹுலிமாவு: சாலையோரம் படுத்திருந்த நாய் மீது காரை ஏற்றி கொன்ற, டிரைவரிடம் விசாரணை நடக்கிறது.
பெங்களூரு ஹுலிமாவு அக் ஷய் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நுழைவாயில் முன் செல்லும் சாலையில் நேற்று மதியம், நாய் படுத்திருந்தது.
அடுக்கு மாடி குடியிப்பில் இருந்து வெளியே வந்த காரை ஓட்டியவர், நாய் மீது காரை ஏற்றினார். இதில் நாய் பரிதாபமாக இறந்தது.
காரை நிறுத்திய அப்பகுதி மக்கள் கார் ஓட்டியவரிடம், அதுகுறித்து கேட்டனர். ஆனால் அவர் அலட்சியமாக பதில் அளித்தார். போலீசார் அங்கு வந்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்த போது, கார் செல்வதற்கு இடம் இருந்தும் வேண்டுமென்றே நாய் மீது காரை ஏற்றி கொன்றது தெரிந்தது. காரை ஓட்டியவரிடம் விசாரணை நடக்கிறது.
