ADDED : மே 28, 2026 02:37 AM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவை சேர்ந்தவர் ஈரண்ணா குடாதார், 26. இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக, ஷிவமொக்காவின், கே.எஸ்.ஆர்.பி., எட்டாவது பட்டாலியனில், ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு 18 நாட்களுக்கு முன் தான், திருமணம் நடந்தது.
இவர், நேற்று காலை வழக்கம் போல பணியில் இருந்த போது, இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, சக ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஈரண்ணா உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
