/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் வாபஸ் பின்னணியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் வாபஸ் பின்னணியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் வாபஸ் பின்னணியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் வாபஸ் பின்னணியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்
ADDED : மே 27, 2025 11:46 PM

கர்நாடகத்தின் 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான, 'சஸ்பெண்ட்'டை நீக்கி, காங்கிரஸ் தனது தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தியதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நீக்கத்துக்கு காரணம், கவர்னர் தாவர்சந்த் கெலாட், தொடர்ந்து கொடுத்த அழுத்தம் என்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சபாநாயகர் காதர் இருக்கை முன் போராட்டம் நடத்திய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், காகிதங்களை கிழித்து வீசினர். இதையடுத்து, 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது எதிர்க்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டம்
இந்த உத்தரவை எதிர்த்து பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். சபாநாயகர் காதரை சந்தித்து, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து முறையிட்டனர்.
அவரும், சபாநாயகர் காதர், முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், 'ஜனநாயக அமைப்பின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் விரோதமானது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மாதம் 25ம் தேதி, சபாநாயகர் காதர், முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் எச்.கே.பாட்டீல், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில், 'எம்.எல்.ஏ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இது பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றி என்று அசோக் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த பாராட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு தான் செல்ல வேண்டும்.
இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், 'காங்கிரஸ் இத்தகைய முடிவெடுக்கும் என்பது எங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே தெரியும். சட்டசபை கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, 18 உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என, அரசுக்கு கவர்னர் வலியுறுத்தியிருந்தார். இதன்படியே, சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது' என தெரிவித்தனர்.
- நமது நிருபர் -