தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/முருங்கை மரத்தில் கறையானை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

முருங்கை மரத்தில் கறையானை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

முருங்கை மரத்தில் கறையானை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு


PUBLISHED ON : மே 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருங்கை சாகுபடியில் கறையானை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகள், செடி முருங்கை மற்றும் மர முருங்கை சாகுபடி செய்துள்ளனர்.

இதுபோன்ற விவசாயிகளுக்கு கோடை காலத்தில் முருங்கை மரங்களுக்கு நீர் பாசனம் தட்டுப்பாடு ஏற்பட்டு கரையான் தாக்கம் ஏற்படுகிறது.

குறிப்பாக, முருங்கை மரத்தில் கறையான் புற்று கட்டி, பூஞ்சாண நோய் தாக்குதல் ஏற்படுத்தும். முருங்கை மரங்கள் உலர்ந்து விடுவதோடு, மரங்கள் உடைந்து விழும் அபாயமும் உள்ளது. இதனால், விவசாயிக்கு மகசூல் இழப்பு ஏற்படுவதோடு, வருவாய் இழப்பு ஏற்படும்.

இதை தவிர்க்க, விவசாயிகள் முருங்கை மரங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். கறையான் புற்று இருந்தால், அதை அகற்றிவிட்டு, காப்பர் ஆக்சி குளோரைடு தெளிக்க வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில், 2 மில்லி காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து, கரையான் புற்று மற்றும் பூஞ்சாண தாக்கல் ஏற்பட்ட இடத்தில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது, முருங்கை மரம் மற்றும் செடி பாதிப்பு இன்றி மகசூல் ஈட்ட வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: செ.சுதாஷா97910 15355.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us