/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அமெரிக்க ரக மாம்பழம் நம்மூரிலும் சாகுபடி
/
அமெரிக்க ரக மாம்பழம் நம்மூரிலும் சாகுபடி
PUBLISHED ON : செப் 24, 2025

அமெரிக்க நாட்டில் விளையும் மாம்பழ சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், அமெரிக்காவில் அதிகமாக விளையும், டோமியோ அக்னி ரக மாம்பழத்தை சாகுபடி செய்துள்ளேன். இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், எளிதாக சாகுபடி செய்யலாம்.
அதற்கேற்ப, கவாத்து என, அழைக்கப்படும் மரக்கிளைகளை அடிக்கடி வெட்டி விட வேண்டும்.
குறிப்பாக, அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில், அதிகமாக விளையும் மாம்பழ ரகம், நம்மூர் களிமண்ணில் நன்றாக விளைச்சல் தருகிறது.
இந்த மாம்பழம் சற்று நார் சத்துடன், சதைப் பற்று அதிகமாக இருக்கும். ஒவ்வொரு பழமும், 800 கிராமிற்கு மேல் எடை இருக்கும்.
இந்த ரக மாம்பழம், ஆந்திரா மாநில விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்திருப்பதால், ஒட்டுச்செடிகளாக வாங்கி சாகுபடி செய்து வருகிறோம். நம் நிலத்தில், சாகுபடி செய்த பின், அதே ரக மாம்பழத்தை ஒட்டு கட்டி மீண்டும் சாகுப டிக்கு விரிவுபடுத்தலாம். இதன் மூலமாக நல்ல மகசூல் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
98419 86400.