PUBLISHED ON : மே 17, 2026

* பிரெட், வாழைப்பழம், பி ஸ்கட், வீட்டில் செய்த முறுக்கு, சிப்ஸ் போன்றவற்றை சுற்றுலா செல்லும் போது எடுத்துச் செல்லுங்கள். அருகில் ஹோட்டலோ, உறவினர் வீடோ இல்லாத போது இவை கை கொடுக்கும்
* லாட்ஜில் தங்குவது மாதிரி இருந்தால், 'பெட்ஷீட்' எடுத்து செல்வது அவசியம். அங்குள்ள கட்டிலின் மீது போட்டிருக்கும் விரிப்புகளின் மேலே போட்டு படுப்பதற்கும், கீழே விரித்துப் படுப்பதற்கும் இவை உதவும்.
* எண்ணெய், 'பேஸ்ட்' மற்றும் முகத்துக்கு போடும் 'க்ரீம்' இவற்றை சிறிய அளவிலான 'பிளாஸ்டிக்' பையில் எடுத்து சென்றால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொன்று கொடுத்து விடலாம்
* இஞ்சி முரப்பாவை, சிறிய 'பிளாஸ்டிக்' பையில் போட்டு எடுத்து சென்றால், உயரமான மலைப் பாதையில் பயணிக்கும் போது, சிலருக்கு ஏற்படும் வாந்தி, வயிற்றுப் புரட்டல் போன்றவைகளுக்கு, சாப்பிட கொடுக்கலாம். கண்டிப்பாக, 'பிளாஸ்டிக்' பொருட்கள் (தட்டு டம்ளர், பைகள்) எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்
* மொபைல் போனுக்கு 'சார்ஜர்' அல்லது 'பவர்-பேங்க்' ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து செல்லவும்.
தொகுப்பு : ரா. அமிர்தவர்ஷினி
