PUBLISHED ON : செப் 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது 63. இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை நீண்ட காலமாக படித்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதை தான். அதைப் படித்து என் பேரன், பேத்தியர் துாங்க செல்லும் முன் சொல்வேன். ஆர்வமுடன் கேட்பர்.
பள்ளி வாழ்க்கையை நினைவூட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள் நல்ல பாடங்களை கற்றுத்தருகின்றன. குழந்தைகளின் படங்கள் அடங்கிய, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதி மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது. கட்டுரை, தொடர்கதை, படக்கதை, புதிர் போட்டி என அனைத்தும் அருமையாக உள்ளன.
தெரியாத விஷயங்கள் ஏராளம். அவற்றை, சிறுவர்மலர் இதழ் வழியாக தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். துவக்கம் முதலே, 'வினோத தீவு!' தொடர்கதை அசத்தலாக உள்ளது. தமாசுகள் ரசிக்கும்படி உள்ளன. சிறுவர்மலர் இதழ் என்றும் வளர வாழ்த்துகிறேன்.
- பி.தனபதி, சென்னை.