PUBLISHED ON : ஏப் 11, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
உரித்து கொட்டை நீக்கிய ஆரஞ்சு - 1
அன்னாசி, கொய்யா,
மாதுளை, திராட்சை - தலா 1 கப்
சேமியா - 100 கிராம்
பால் - அரை லிட்டர்
முந்திரி, திராட்சை, ஏலக்காய் துாள் - சிறிதளவு.
செய்முறை:
பழங்களை கழுவி, மிக்ஸியில் அரைத்து வடி கட்டவும். பாலை காய்ச்சி ஆறவைத்து, சர்க்கரை சேர்த்து, வடிகட்டிய பழச்சாறை சேர்க்கவும்.
தண்ணீரில் சேமியாவை வேக வைத்து, ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பழச்சாறு கலவையை சேர்த்தால், பழப்பாயாசம் தயார். சுவையாக இருக்கும். விளையாடி களைத்து வரும் குழந்தைகளுக்கு, புத்துணர்ச்சி தரும்.
- க.கயல்விழி, திருச்சி.
