PUBLISHED ON : ஏப் 24, 2026 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்குயின், மலேரியா தினம்
மலேரியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சார்பில் ஏப். 25ல் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மலேரியாவை ஒழிக்க உந்துதல்: தற்போது நம்மால் முடியும். தற்போது நாம் அதைச் செய்தாக வேண்டும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி அனோபிலிஸ் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக்கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது. மலேரியாவால் 2023ல் 26.30 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 5.97 லட்சம் பேர் பலியாகினர். பறவையினத்தை சேர்ந்த பென்குயின்களை பாதுகாக்க ஏப். 25ல் உலக பென்குயின் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

