sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ படகு சவாரி அனுமதிக்கு அலைக்கழிக்கும் அதிகாரி!

 படகு சவாரி அனுமதிக்கு அலைக்கழிக்கும் அதிகாரி!

 படகு சவாரி அனுமதிக்கு அலைக்கழிக்கும் அதிகாரி!

1


PUBLISHED ON : மே 06, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2026 12:22 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நடிகர் கட்சிக்கு தாவ போறார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''த.வெ.க., ஆளுங்கட்சியாகப் போறதாலே, நிறைய பேர் பார்வை அந்த பக்கம் திரும்புதோ...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''இது, தேர்தலுக்கு முன்னாடியே நடந்த பேச்சுவார்த்தை... அதாவது, சென்னை திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருந்தவர் முன்னாள் அமைச்சர், கே.பி.பி.சாமியின் மகன் சங்கர்... இந்த தேர்தல்ல, இவரது தொகுதியை, கூட்டணி கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூ.,வுக்கு ஒதுக்கிட்டா ஓய்...

''இதனால, கடும் விரக்தியில இருந்த சங்கர், தேர்தல் பணிகள்ல அவ்வளவா ஆர்வம் காட்டல... மீனவர் சமுதாயம் மத்தியில் த.வெ.க.,வுக்கு நல்ல ஆதரவு இருக்கறதால, அதே சமுதாயத்தை சேர்ந்த நாமும் அங்க போயிடலாம்னு, அப்பவே அந்த கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியிருக்கார் ஓய்...

''அவாளும், 'தேர்தல் முடிஞ்சதும் பார்க்கலாம்'னு சொல்லியிருந்தாளாம்... 'இப்ப, த.வெ.க., ஆளுங்கட்சியாகப் போறதால, சங்கர் அங்க போறது உறுதி'ன்னு, தி.மு.க.,வினரே சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அவசர அவசரமா திறந்தும் பயன்பாட்டுக்கு வரல பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''தி.மு.க., ஆட்சியில், அமைச்சரா இருந்த சாத்துார் ராமச்சந்திரனின் அருப்புக்கோட்டை தொகுதியில், 34 கோடி ரூபாய்ல மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுனாங்க... பணிகள் முழுசா முடியாத நிலையில, தேர்தலுக்காக அவசர அவசரமா ஸ்டாலினை வச்சு, திறப்பு விழாவை நடத்திட்டாங்க பா...

''ஆனா, கட்டுமான பணிகள் முழுசா முடியாததால, பொதுப்பணித் துறையினர், மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்னும் கட்டடத்தை ஒப்படைக்கல... 'எங்க அனுமதியில்லாம ஒரு ஆணி கூட அடிக்கக் கூடாது'ன்னும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சொல்லிட்டாங்க... இதனால, திறப்பு விழா நடத்தியும், மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வரல பா...'' என்றார், அன்வர்பாய்.

''படகு சவாரிக்கு அனுமதி தர மாட்டேங்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில், பல வருஷங்களுக்கு முன்னாடியே படகு சவாரியை நிறுத்திட்டாவ... இதே மாவட்டத்தில் இருக்கிற அமராவதி அணையில், மகளிர் சுய உதவிக் குழு மூலமா, 15 வருஷங்களுக்கும் மேலா படகு சவாரி நடந்துட்டு இருந்துச்சு வே...

''சமீபத்துல மாவட்ட சுற்றுலா அதிகாரி, தன் நண்பர்களுடன் இந்த அணையில ஆய்வு நடத்தியிருக்காரு... 'படகு சவாரி பாதுகாப்பா இல்ல'ன்னு சொல்லி, நிறுத்தி வைக்க சொல்லிட்டாரு வே...

''அதிகாரியின் அறிவுரைப்படி கூடுதல் படகுகள், 'வாக்கி டாக்கி' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை, மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிட்டு, அனுமதி கேட்டு அதிகாரிக்கு கடிதம் குடுத்தாங்க... ஆனாலும், அனுமதி வழங்காம, மகளிர் குழுவினரை அதிகாரி அலைக்கழிச்சிட்டு இருக்காரு வே...

''அமராவதி அணைக்கு கேரளாவுல இருந்தும் நிறைய சுற்றுலா பயணியர் வர்றாவ... இவங்க, படகு சவாரி இல்லாம ஏமாற்றத்துடன் திரும்பி போறாவ... '15 வருஷமா சின்ன விபத்து கூட இல்லாம படகு இயக்கியும், அனுமதி தர மறுப்பது சரியா'ன்னு மகளிர் குழுவினர் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''அரவிந்த்குமார் இப்படி உட்காரும்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us