தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அமைச்சர் பதவிக்காக யாகம் நடத்திய எம்.எல்.ஏ.,

 அமைச்சர் பதவிக்காக யாகம் நடத்திய எம்.எல்.ஏ.,

 அமைச்சர் பதவிக்காக யாகம் நடத்திய எம்.எல்.ஏ.,


PUBLISHED ON : மார் 26, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ஞ்சி டீயை பருகியபடியே, ''ஊழியர்களிடமே, 'கட்டிங்' கேட்கிறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம் பித்தார் அந்தோணிசாமி.

''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை, ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையை நிர்வகிக்கும் உயர் பதவிக்கு, 'சீனியா ரிட்டி' அடிப்படையில் பாஸ்கர்னு ஒரு டாக்டர் தான் வந்திருக்கணும்... ஆனா, அவரை ஓரங்கட்டிட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரியில் இருந்த பெண் டாக்டர், ராயப்பேட்டைக்கு வந்துட்டாங்க...

''இங்க, நோயாளிகளுக்கு ஆப்பரேஷன் செய்ற டாக்டர்களுக்கு, முதல்வரின் காப்பீடு திட் டத்துல ஊக்கத்தொகை வழங்குறாங்க... இந்த பெண் டாக்டர், எந்த ஆப்பரேஷனும் செய்யாம, ஊக்கத்தொகை யில் பங்கு கேட்கிறாங்க...

''மருத்துவ பணியாளர்களை ஒருமையில் தான் பேசுறாங்க... நர்ஸ்களுக்கு, 'நைட் டியூட்டி' போடாம இருக்கணும்னா, 'கணிசமான தொகையை வெட்டுங்க'ன்னு கறாரா கேட்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், ''ஆயிஷா... பத்து நிமிஷம் கழிச்சு பேசுறேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''தகவல் கமிஷன் பஞ்சாயத்தை கேளுங்க பா...'' என்றபடியே தொடர்ந்தார்...

''சென்னை, சைதாப்பேட்டையில் மாநில தகவல் ஆணையம் இருக்கு... இதுக்கான ஊழியர்கள் நியமனம், இடமாறுதல்களை தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை தான் செய்யுது பா...

''அரசு அலுவலர்களை, பொதுவா, மூணு வருஷத்துக்கு ஒரு முறை இடமாறுதல் பண்றது வழக்கம்... ஆனா, தகவல் ஆணையத்தில், 14 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அஞ்சு வருஷம் முதல், 18 வருஷங்களா அங்கயே பணியில் இருக்காங்க பா...

''சமீபத்தில், மனிதவள மேலாண்மை துறை செயலர் சமயமூர்த்தி, தகவல் ஆணையத்தில், 18 வருஷங்களா இருந்த தனி செயலரை பொதுத் துறைக்கும், உதவி பிரிவு பெண் அதிகாரியை உள்துறைக்கும் இடம் மாற்றி உத்தரவு போட்டாரு...

''ஆனா, அந்த ரெண்டு பேருமே, 'நாங்க எங்கயும் போக மாட்டோம்'னு மறுத்துட்டாங்களாம்... தமிழக அரசும், தேர்தல் பரபரப்புல இதை கண்டுக்கல பா...'' என்றார், அன்வர்பாய்.

''வாங்க ஜெயகுமார்... ஊர்ல, வசுமதி சவுக்கியமாவே...'' என நண்பரிடம் விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, ''அமைச்சராகணும்னு யாகம் நடத்தியிருக்காரு வே...'' என்றார்.

' 'யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.

''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற பிரபல முருகன் கோவில் தொகுதியில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தர் இருக்காரு... மறுபடியும் அதே தொகுதியில், 'சீட்' கேட்டிருக்காரு வே...

''ஆனா, அஞ்சு வருஷமா தொகுதிக்கு, எம்.எல்.ஏ., எந்த ஒரு திட்டத்தையுமே கொண்டும் வரல... கடந்த தேர்தலப்ப தந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றல வே...

''போதாக் குறைக்கு, கட்சி நிர்வாகிகளும் அவ ர் மேல அதிருப்தியில இருக்காவ... இதனால, சீட் கிடைக்குமான்னு பீதியில் இருக்கிறவர், சமீபத்தில் கேரளாவுல இருந்து ஆறு நம்பூதிரிகளை வரவழைச்சிருக்காரு வே.. .

''அவங்களை வச்சு, தன் வீட்டுல அஞ்சு நாட்கள் சிறப்பு யாகம் செஞ்சிருக்காரு... அதாவது, தேர்தல்ல சீட் கிடைச்சு, ஜெயிச்சு, அமைச்சர் பதவியில் அமரணும்னு இந்த மூணு வேண்டுதல்களுக்காக யாகத்தை நடத்தியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''சந்திரன், நாளைக்கு திருத்தணி போயிட்டு வந்துடலாமா ஓய்...'' என பேச, மற்றவர்கள் இடத்தை காலி செய்த னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us