தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஊழலில் ஊறியவருக்கு அமைச்சரின் உதவியாளர் பணி!

 ஊழலில் ஊறியவருக்கு அமைச்சரின் உதவியாளர் பணி!

 ஊழலில் ஊறியவருக்கு அமைச்சரின் உதவியாளர் பணி!

2


PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:38 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, “தேர்தலுக்கு முன்னாடியே, 29 கோப்புகளை திருப்பி அனுப்பிட்டாங் கல்லா...” என விவாதத்தை ஆரம்பித்தார்.

“எந்த துறையில பா...” எனக் கேட்டார் அன்வர்பாய்.

“சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுறதுக்கு, சி.எம்.டி.ஏ., தான் அனுமதி தரணும்... இதுல, நில வகைப்பாடு சரியா இருந்தா தான் அனுமதி தருவாவ வே...

“இதனால, நில வகைப்பாடு மாறுதலுக்காக பலரும் விண்ணப்பம் குடுப்பாவ... இதுல ஏக்கருக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அதிகாரிகள், 'கட்டிங்' வசூலிப்பாவ வே...

“சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்னாடி, மார்ச் முதல் வாரத்தில், நில வகைப்பாடு சம்பந்தமான 29 கோப்புகள், அப்ப சி.எம்.டி.ஏ.,வுக்கு அமைச்சரா இருந்த சேகர்பாபு அலுவலகத்துக்கு போயிருக்கு... அமைச்சரின் கையெழுத்து மட்டும் தான் பாக்கி இருந்துச்சு வே...

“ஆனா, தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு சில நாட்களுக்கு முன்னாடியே, அந்த கோப்புகளை அமைச்சர் அலுவலகம் திருப்பி அனுப்பிட்டு... இப்ப, ஆட்சி மாறிட்டதால அந்த கோப்புகள் மீது என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியாம, அதிகாரிகள் மண்டையை பிய்ச்சுட்டு இருக்காவ வே...” என்றார் அண்ணாச்சி.

“தொடர்ந்து, அஞ்சு வருஷமா இடமாறுதல்ல தப்பிட்டு இருக்காங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“தமிழகம் முழுக்க, எல்லா துறைகள்லயும் அதிகாரிகளை இடமாறுதல் பண்றாங்களே... செய்தி மக்கள் தொடர்பு துறையில், பி.ஆர்.ஓ.,க்கள் உட்பட 36 பேரை சமீபத்துல இடமாற்றம் செஞ்சாங்க...

“ஆனா, கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்ட அதிகாரிகள் மட்டும் அதே இடத்துல இருக்காங்க... 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தப்ப, இந்த பதவியில் அமர்ந்தவங்க, அஞ்சு வருஷங்களை தாண்டியும் அதே இடங்கள்ல நீடிக்கிறாங்க... 'ஒட்டுமொத்த அதிகாரிகள் இடமாறுதல்லயும் இவங்க எப்படி தப்பிச்சாங்க'ன்னு அந்த துறை ஊழியர்களே ஆச்சரியப்படுறாங்க...” என்றார் அந்தோணிசாமி.

“செந்திலண்ணா வாங்க... உங்க நண்பர் ஜான் கெஸ்பர் இப்பதான் கிளம்பினாரு...” என்ற அன்வர்பாயே, “ஊழல் புகார்ல சிக்கியவருக்கு உதவியாளர் பதவி குடுத்திருக்காங்க பா...” என்றார்.

“யார் ஓய் அது...” என விசாரித்தார் குப்பண்ணா.

“கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கொங்கு மண்டல அமைச்சருக்கு உதவியாளரா ஒருத்தர் இருந்தார்... அமைச்சருக்கு போட்டியா, இவரும் ஏகபோகமா சம்பாதிச்சிட்டாரு பா...

“தி.மு.க., ஆட்சியில, இந்த உதவியாளருக்கு நெருங்கிய இடங்கள்ல, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமானவரி சோதனைகள் நடந்துச்சு.. . ஊழல் புகார்ல சிக்கியதால, அவரது பதவி உயர்வையும் நிறுத்தி வச்சிருந்தாங்க பா...

“இப்ப த.வெ.க., அரசுல, 'டாஸ்மாக்'கை கவனிக்குற துறையின் முக்கிய புள்ளிக்கு உதவி யாளரா வந்துட் டாரு... முக்கிய புள்ளியும், உதவியாளரும் ஒரே சமுதாயம் என்பதால, உள்ளாட்சித் துறையில் இருந்த அந்த உதவியாளரை, தன் துறைக்கு முக்கிய புள்ளி கேட்டு வாங்கி யிருக்காரு...

“உதவியாளரை பத்தி நல்லா தெரிஞ்சவங்க, 'ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா'ன்னு கிண்டல் அடிச்சிட்டு இருக்காங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.

“விக்னேஷ், வீரபத்ரன் வரார் பாரும்... எதுக்கும் உஷாரா இரும் ஓய்...” என, நண்பரை எச்சரித்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us