sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

 பனை மரங்களின் பாதுகாவலர்!

/

 பனை மரங்களின் பாதுகாவலர்!

 பனை மரங்களின் பாதுகாவலர்!

 பனை மரங்களின் பாதுகாவலர்!


PUBLISHED ON : மார் 29, 2026 12:32 AM

Google News

PUBLISHED ON : மார் 29, 2026 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், பனை மரங்கள் வளர்ப்பில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வரும், 47 வயதான ஜெயந்த் பீட்டர்: எனக்கு சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல். பி.எஸ்சி., முடித்து, சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.

சுற்றுச்சூழலுக்கு, நம்மால் முடிந்த பணிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

இதனால், அழியும் நிலையில் இருக்கும் பனை மரங்களை பாதுகாக்க முடிவு செய்து, 'பொழில் தன்னார்வலர்' என்ற அறக்கட்டளையை, 10 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித் தேன்.

அதில், எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களை, தன்னார்வலர்களாக ஒருங்கிணைத்தேன்.

எங்கள் ஊரைச் சுற்றி இருக்கும் குளக்கரைகள், ஓடைக்கரைகள், ஆற்றங்கரை, கோவில் நிலங்கள் மற்றும் கல்லறை தோட்டங்கள் என்று எங்கள் குழுவினர் வாயிலாக இதுவரைக்கும் கிட்டத்தட்ட, 1 லட்சம் பனை விதைகளை விதைத்துள்ளோம்.

பனை மரங்கள், எல்லா வகையான மண்ணிலும் வளர்ந்தாலும், செம்மண்ணில் தான் சிறப்பாக வளரும். பழுத்த பனம்பழங்களைத் தான், விதைகளுக்காக சேகரிப்போம்.

பொதுவாக, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பனம்பழங்கள் பழுத்து விழும். இந்த சமயத்தில் அவற்றை சேகரித்து, ஒரு மாதம் நிழலில் குவித்து வைப்போம்.

அதன்பின், பனம்பழங்களை உரித்து, தரமான விதைகளை மட்டும் பிரித் தெடுப்போம்.

பனை விதைகளில் இருக்கும் சதை பகுதியை, முழுமையாக நீக்கி, மூன்று மணி நேரம் விதைகளை தண்ணீரில் ஊற வைத்து விதைத்தால், நன்றாக முளைக்கும்.

மண்ணை மிகவும் ஆழமாக தோண்டி, பனை விதைகளை விதைக்க வேண்டிய அவசியம் இல்லை; 1 அடி அல்லது 2 அடி ஆழத்துக்கு மண்ணை தோண்டி, விதைக்கலாம்.

விதையின் மேல் பகுதி, மண்ணின் அடிப்பகுதியில் இருக்குமாறு விதைக்க வேண்டும்; அதன்பின் தண்ணீர் ஊற்றினால் முளைத்து வந்துவிடும்.

மழைக்காலங்களில் விதைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை; பனை விதைகள் இயற்கையாகவே முளைத்து விடும். ஆனாலும் முளைத்து வரும் வரை, வாரம் ஒருமுறை தண்ணீர் ஊற்றினால், வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இப்போது எங்கள் பகுதியில் மட்டும் தான், பனை விதைப்பு பணிகளை செய்கிறோம். தொடர்ந்து, தமிழகம் முழுக்க பனை விதைப்பு பணிகளை செய்ய திட்டமிட்டுஇருக்கிறோம்.

தொடர்புக்கு 96007 72050

*****************

 அம்மாவின் சேமிப்பு மந்திரம்!



தாயின் அறிவுரையால் கடனின்றி வாழ்க்கை நடத்தும், திருச்சி மாவட்டம், பிச்சாண்டார் கோவிலைச் சேர்ந்த நா.நாகராஜன்:

எது தேவை, எது அவசியம்; இந்த செலவை செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் என்று ஆய்வு செய்து, ஒவ்வொரு ரூபாயும் செலவழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு, எப்போதும் பணச் சிக்கல் வருவதில்லை. அப்படித்தான், என்னையும் நான் மாற்றிக்கொண்டேன். அதற்கு காரணம், என் அம்மா.

பணத்தை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்பதையும், யாரிடமும், எந்த தேவைக்கும் கடன் வாங்கக்கூடாது என்பதையும் எனக்கு கற்றுக்கொடுத்தது, அம்மா தான்.

நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டின் தென்னங்கீற்று கூரையை, ஓட்டு வீடாக மாற்றலாம் என்று உறவினரிடம் கடன் கேட்டிருந்தார், அப்பா; ஆனால், கடன் வாங்க என் அம்மா ஒப்புக் கொள்ளவில்லை.

பின், சிறிது சிறிதாக சேமித் த பணத்தை வைத்து தான், ஓட்டு வீடாக மாற்றினார் அப்பா. அப்பாவின் திடீர் மறைவுக்கு பின், எங்கள் வாழ்க்கை போராட்டமாக இருந்தது. அம்மா எப்படியோ சமாளித்து, கடன் வாங்காமல், குடும்பத்தை நிர்வகித்து, முன்னுக்கு கொண்டு வந்தார்.

நான், பட் டப்படிப்பு முடித்து, மத்திய அரசில் ஒரு சாதாரண வேலையில் சேர்ந்தேன். தபால் நிலையத்தில், இந்திரா விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு பணம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு, அதில் முதலீடு செய்யச் சொன்னார், அம்மா. அவர் சொன்னபடி செய்து பலன் அடைந்தேன்.

அதன் தொடர்ச்சியாக ப ல்வேறு முதலீடுகளை செய்து, என்னை வளப்படுத்திக் கொண்டேன். ஓரளவுக்கு பணம் சேர்ந்தது. அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க திட்டமிட்டே ன். ஆனால், 'நம் வீட்டுக்கு பின்னால், சொந்த இடம் இருக்கும்போது, எதற்கு வெளியில் வீடு வாங்கவேண்டும்.

நாம் விரும்பியபடி, நம் இடத்தில் வீடு கட்டினால், மனைக்கான பணத்தை மிச்சப்படுத்தலாம்' என்றார் அம்மா.

இ தன்படி, கையில் இருந்த பணத்தில், எவரிடமும் கடன் வாங்காமல், எங்கள் தேவைக்கேற்ப சொந்த இடத்தில் சிக்கனமாக வீடு கட்டினேன். கடந்த, 25 ஆண்டுகளாக அந்த வீட்டில் சவுகரியமாக குடும்பத்து டன் வசிக்கிறேன்.

அம் மா என்ன செலவு செய்தாலும், உடனே ஒரு டைரியில் எழுதி வைப்பார். 'அப் படிச் செய்தால் தான் வரவுக்குள் செலவு செய்கிறோமா இல்லையா என்பது தெரியும்' என்று அடிக்கடி கூறுவார்.

அம்மாவை பின்பற்றி நானும் தினமும் செலவுக் கணக்கை எழுதி வருகிறேன். அம்மா அறிவுரைப்படி, தேவையான செலவுகளை மட்டும் செய்து, கடன் வாங்காமல், நிம்மதியாக இருக் கிறேன்.






      Dinamalar
      Follow us