PUBLISHED ON : செப் 12, 2025 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் பிரசார பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், அ.தி.மு.க., ஆட்சியின்போது கொண்டு வந்த திட்டங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார். அதில், கீழ்கதிர்பூர் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், குடிசை மாற்று வாரியம் சார்பில், 2,112 வீடுகள் கட்டியதை பெருமையாக தெரிவித்தார்.
இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'பழனிசாமி பெருமையாக கூறும் அந்த கட்டடத்தை கட்டியதில், 30 கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செஞ்சிருக்கு... இந்த விஷயம் அவருக்கு ஞாபகம் வந்திருந்தா, இந்த கட்டடம் பற்றி பேசியே இருக்க மாட்டாரு...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.