/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'சரியான பதிலடி குடுத்துட்டாரு!'

 'சரியான பதிலடி குடுத்துட்டாரு!'

 'சரியான பதிலடி குடுத்துட்டாரு!'

 'சரியான பதிலடி குடுத்துட்டாரு!'

 'சரியான பதிலடி குடுத்துட்டாரு!'

PUBLISHED ON : ஏப் 10, 2026 01:18 AM


Google News
Latest Tamil News
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி, சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சி மீது, பொதுமக்கள் அதிக வெறுப்பில் இருக்கின்ற னர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும். பழைய வாக்குறுதிகளுக்கு நிகராக, தற்போது, தி.மு.க., புதிய வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது.

'சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத, தி.மு.க., அரசை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின் றனர். தி.மு.க.,வின் எண்ணங்கள் தோல்வி அடையும். கடந்த காலங்களில், காங்கிரசை எதிர்த்து தான், தி.மு.க.,வே உருவானது. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., அடிமையிலும் அடிமையாக இருக்கிறது' என்றார்.

இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'நம்மை பா.ஜ.,வின் அடிமைன்னு திட்டும், தி.மு.க.,வினருக்கு அண்ணன் சரியான பதிலடி குடுத்துட்டாருப்பா...' என கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.