PUBLISHED ON : மே 19, 2026 12:16 AM

தமிழக முதல்வரான விஜய், தேர்தல் பிரசாரத்தின்போது வெள்ளை சட்டை, வெளிர் காக்கி கலர் பேன்ட் அணிந்தது, 'டிரெண்ட்' ஆனது. ஓட்டுப்பதிவின்போது த.வெ.க., தொண்டர்கள், தங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த வகை ஆடையை அணிந்திருந்தனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கோட் - சூட் அணிந்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். சரி, பதவியேற்புக்காக இப்படி வந்துள்ளார் என்று பலரும் நினைத்திருக்க, இப்போது தினமும் கோட் - சூட் அணிந்தே பணிகளை மேற்கொள்கிறார்.
இந்த கோட் - சூட் த.வெ.க.,வினர் மத்தியில், 'டிரெண்ட்' ஆகி வருவதால், பல ஜவுளி கடைகளில், 'சி.எம்., லுக்' என்ற பெயரில் கோட் - சூட், பெல்ட், கருப்பு நிற ஷூ என, 'காம்போ'வாக விற்பனைக்கு வைத்துள்ளனர்.
மதுரையில் ஒரு கடையில் சமீபத்தில் இதை வாங்கி அணிந்த த.வெ.க., தொண்டர் ஒருவர், 'இனிமே நம்ம சீருடை இதுதான் பா...' என கூற, உடன் வந்திருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்து ஆமோதித்தனர்.
