தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'முதல்வரை புகழ மாட்டேங்கிறாரே!'

 'முதல்வரை புகழ மாட்டேங்கிறாரே!'

 'முதல்வரை புகழ மாட்டேங்கிறாரே!'


PUBLISHED ON : மார் 14, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026 03:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் நவீன கதிரியக்க சிகிச்சை மையம் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது.

இதில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், 'இந்த இடத்தில், அந்த காலத்தில் மருத்துவமனை அமைய, அப்போது எம்.எல்.ஏ.,வாக இருந்த துரைசாமி தான் காரணம். கருணாநிதி ஆட்சியில் எம்.எல்.ஏ.,வாக அவர் இருந்தபோது, பல எதிர்ப்புகளை தாண்டி, இங்கு மருத்துவமனை வர காரணமாக இருந்தார்.

'அதோடு, திருப்பூரில் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, சிக்கண்ணா ஆண்கள் அரசு கல்லுாரி அமையவும் அவர்தான் காரணமாக இருந்தார்' என, புகழ்ந்து தள்ளினார்.

இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'இந்த மருத்துவமனையை நவீனமா கட்டியுள்ள நம்ம முதல்வரை புகழாமல், 'மாஜி' எம்.எல்.ஏ., புகழ் பாடிட்டு இருக்காரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us