தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நல்லவேளை தமிழகம் தப்பிச்சது!'

 'நல்லவேளை தமிழகம் தப்பிச்சது!'

 'நல்லவேளை தமிழகம் தப்பிச்சது!'

3


PUBLISHED ON : ஜூன் 10, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2026 12:09 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, அம்பத்துாரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசுகையில், 'நாங்கள் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஆயினும், நாங்கள் கூறிய ஒரு சில கருத்துகளுக்காக, கூட்டணி கட்சியினர் எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

'பதிலுக்கு எங்கள் தம்பிகள் அம்புகளை ஏவ தயாராக உள்ளனர்; ஆனால், எனக்காக அமைதி காக்கின்றனர். நான் பிரசாரம் செய்த 34 தொகுதிகளில், 24ல் தி.மு.க., வென்றுள்ளது. தற்போது விஜய்க்கு வரும் கூட்டத்தை விட, 1994ம் ஆண்டு ம.தி.மு.க.,வை துவங்கிய போது எனக்கு அதிக கூட்டம் வந்தது. அப்போது சமூக வலைதளங்கள் இல்லாததால், அது மக்களிடம் சென்று சேரவில்லை' என்றார்.

இதைக் கேட்ட ஒருவர், 'அப்ப மட்டும் சமூக வலைதளங்கள் இருந்திருந்தால், வைகோ முதல்வராகியிருப்பாரு...' எனக் கூற, அருகில் இருந்தவர், 'நல்லவேளை, தமிழகம் தப்பிச்சது...' என்ற படியே அங்கிருந்து கிளம்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us