PUBLISHED ON : மார் 26, 2026 02:06 AM

சென்னை, கொளத்துாரில் தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா பங்கேற்று பேசும்போது, 'யார் வந்து நின்றாலும், என் தமிழக மக்களை, யாருக்கும் தலைகுனிய விடமாட்டேன் என, காவல் சாமியாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
'நீங்கள் நடியுங்கள்; நாங்கள் ரசிக்கிறோம்; ஏன் விசில் கூட அடிக்கிறோம். ஆனால், எங்களை ஆள வேண்டும் என நினைத்தால் எப்படி? எங்கள் குடும்பத் தலைவனாக இருக்கவும் ஒரு தகுதி வேண்டும் என, தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். சினிமா பார்க்க வாங்க என, இளம் தலைமுறையை நாசம் செய்யும் தலைவனுக்கு மத்தியில், பிள்ளைகளிடம், 'நீங்கள் படியுங்கள்; மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என, நம் தமிழக முதல்வர் சொல்கிறார். இந்த தலைமுறைக் கான சரியான தலைவராக ஸ்டாலின் உள்ளார்' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'சினிமாவை விட, போதை பொருட்களால் இளைஞர்கள் சீரழிவது இவங்களுக்கு தெரியலையா...' என, முணுமுணுத்த படியே கிளம்பினார்.
