தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'குறைவா மதிப்பிட கூடாது!'

 'குறைவா மதிப்பிட கூடாது!'

 'குறைவா மதிப்பிட கூடாது!'

2


PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:59 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ், சமீபத்தில் கோவை வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், 'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; அது ஜனநாயக உரிமை. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட தொடர் தோல்வியால், இன்னொரு முயற்சி எடுத்துள்ளனர்.

'ஹிட்டான படம், 'ரீ ரிலீஸ்' ஆனாலே மக்கள் பார்க்க மாட்டார்கள். ஒரு சில நடிகர்கள் தான் விதிவிலக்கு. ஏற்கனவே, 'பிளாப்' ஆன படத்தை ரீ ரிலீஸ் செஞ்சா, அது எப்படி எடுபடும்னு தெரியல. கண்டிப்பா தோல்வி நிச்சயம் தான்' என்றார்.

அண்ணாமலை துவங்க இருக்கும் புதிய கட்சியை தான், பெயர் குறிப்பிடாமல் அருண்ராஜ் விமர்சிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட மூத்த நிருபர் ஒருவர், 'இப்படித்தான் த.வெ.க.,வையும் எல்லாரும் மதிக்காம இருந்தாங்க... இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாகலையா... அந்த மாதிரி, அண்ணாமலை கட்சியையும் இவர் குறைவா மதிப்பிட கூடாது' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us