PUBLISHED ON : மார் 20, 2026 03:07 AM

புதுச்சேரியில், நாம் தமிழர் கட்சி சார்பில் சமீபத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 'புதுச்சேரியை தனி மாநிலமாக்க, 16 முறை தீர்மானம் போட்டும் பலனில்லை. புதுச்சேரியை முன்பு காங்., ஆண்டது; இப்போது பா.ஜ., கூட்டணியில் ரங்கசாமி ஆள்கிறார். ஆனாலும், உரிமை கிடைக்கவில்லை. தனி மாநிலமாக புதுச்சேரியை அறிவிக்க வேண்டும். 2 அல்லது 3 கோடி ரூபாய் இருந்தால், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் வென்றுவிடலாம் என்ற நிலை தான் உள்ளது.
'ஆனால், புதுச்சேரியில் மக்களுடன் இருக்கும் மூன்றாவது பெரிய கட்சி, நாம் தமிழர் கட்சி தான்; நிச்சயமாக இந்த தேர்தலில் முதலிடம் பிடிப்போம்' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'தமிழகத்தில் நமக்கு ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை... இங்காவது ஆட்சிக்கு வந்து முதல்வராகிடலாம்னு அண்ணன் நினைக்கிறாரோ' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
