PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

டாக்டர் கே.தங்கமுத்து, பொள்ளாச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக அளவில் இளம் பெண்களும், இளைஞர்களும் ஓட்டு போட்டுள்ளதால், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தான் அடுத்து ஆட்சி அமைக்கப் போவதாகவும், அதற்காக இப்போதே அனைத்து இலாகாக்களுக்குமான அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் இணையதளங்களில் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
வெற்றி கோட்டை தொடும் வரை எந்த வீரரின் வெற்றியும் உறுதியாவதில்லை என்ற எதார்த்த உண்மையை, அரசியல்வாதிகள் மறந்து விடுகின்றனர்.
கடந்த 1973 - 74 பார்லிமென்ட் தேர்தலில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை எதிர்த்து, தி.மு.க.,வினர் பட்டிதொட்டி எல்லாம், 'கப்பல் பேர ஊழல் செய்தவர் எம்.ஜி.ஆர்.,' எனக் கூறி, கப்பல் சின்னங்களை வரைந்தும், அதன் உருவப்படங்களை வீடுகளில் தொங்க விட்டும் எம்.ஜி.ஆரை கேவலப்படுத்தினர்.
விளைவு, தி.மு.க., 39 தொகுதிகளில் வென்றது; அ.தி.மு.க., கோபி தொகுதி யில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. காங்., தலைமையில் இந்திரா பிரதமராக பதவி ஏற்றதும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வற்புறுத்தலின்படி எம்.ஜி.ஆர்., ஆட்சியை இந்திரா கலைத்தார்.
அதைத் தொடர்ந்து வந்த சட்டசபை தேர்தலின்போது, 'பார்லிமென்ட் தேர்தலைப் போல் சட்டசபை தேர்தலிலும் எம்.ஜி.ஆரை தோற்கடிப்போம்' என்று சூளுரைத்தனர், தி.மு.க.,வினர்.
ஆனால், ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து, 'நான் என்ன தவறு செய்தேன்... என்னை ஏன் தோற்கடித்தீர்கள்?' என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டுமே மக்கள் முன் வைத்தா ர், எம்.ஜி.ஆர்.,
தேர்தலும் முடிந்தது; இன்று போலவே, அன்றும் தேர்தல் முடிவு வருவதற்கு முன், தி.மு.க.,வினர், 'நாங்கள் தான் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறோம்' எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், இன்று நடிகர் விஜயின் த.வெ.க.,வினர் போன்று, யார் யார் எந்தெந் த துறைக்கு அமைச்சர்கள் என அறிவித்ததுடன், தலைமை செயலகத்திற்குள் சென்று, தங்களுக்கான அறைகளை தேர்வு செய்தனர்.
இன்னும் சில தி.மு.க., வேட்பாளர்கள் தங்களை அமை ச்சர்களாகவே நினைத்துக்கொண்டு, பெட்டி படுக்கைகளுடன் சென்னைக்கே குடிவந்து விட்ட கூத்து எல்லாம் நடந்தது. ஆனால், தேர்தல் முடிவில், 135 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தார், எம்.ஜி.ஆர்.,
அன்றுபோலவே, இன்றும் த.வெ.க., 20 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெறும் என கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், அக்கட்சியினர் எந்தெந்த துறைக்கு யார் யார் அமைச்சர்கள் என முடிவு செய்ய கிளம்பிவிட்டனர்.
காலம் போடும் கணக் கின் முன், மனிதர்களின் மனக் கணக்கு பெரும்பாலும் பொய் த் துப் போவதே வழக்கம்.
எனவே, அரசியல் கணக்குகளை மீறிய, அதீத நம்பிக்கை எப்போதும் ஏமாற்றத்தையே தரும் என்பதை த.வெ.க.,வினர் மனதில் கொள்வது நல்லது!

'குளுகுளு' சுற்றுலா சென்றுள்ளவர்கள் கவனத்திற்கு!
கு.காந்திராஜா, சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி, குஜராத் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும், தொடர்ந்து 24 வருடங்களாக உயர் பதவியில் இருக்கிறார். ஆனால், ஒரு நாள் கூட விடுமுறையோ, ஓய்வோ, எடுத்ததில்லை; ஒரு நாள் கூட உல்லாச பயணம் சென்றதில்லை.
தேசத்திற்காக, மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருக்கிறார், மோடி.
இதுவரை அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் எல்லாம், அந்தந்த நாட்டு முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காகவும், இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், பிற நாடு களுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்துவதற்காவும் மட்டுமே அமைந்திருந்தன.
இன்று உலகின் தலைவர் என்று போற்றப்படும் நிலையில் பிரதமர் மோடி இருப்பது, நமக்கெல்லாம் பெருமை.
இப்படி பல நாடுகளுடனும் நட்புறவு பாராட்டுவதால் தான், கொரோனா காலத்தை சமாளிக்க முடிந்தது; தற்போதைய பெட்ரோல், டீசல், எரிவாயு பிரச்னையையும் சமாளிக்க முடிகிறது.
மக்களுக்காக பணியாற்றுகிறேன் எனச் சொல்லி, அரசியலுக்கு வருபவர்கள் அனைவரும், பிரதமர் மோடியைப் பின்பற்றினால் தான், அவரவர் மாநில மக்கள் மீது அவர்கள் அக்கறையுடன் இருக்கின்றனர்; அவர்களுக்காக பாடுபடு கின்றனர் என்று கருதலாம்.
இது, தற்போது, 'குளுகுளு' பிரதேசங்களுக்கு கிளம்பி யுள்ள, பா.ஜ.,வினர் உட்பட அனைவருக்கும் பொருந்தும்!
