தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ நாய் குரைத்ததால் நின்று போன திருமணம்; உ.பி.,யில் நிகழ்ந்த வினோத சம்பவம்

 நாய் குரைத்ததால் நின்று போன திருமணம்; உ.பி.,யில் நிகழ்ந்த வினோத சம்பவம்

 நாய் குரைத்ததால் நின்று போன திருமணம்; உ.பி.,யில் நிகழ்ந்த வினோத சம்பவம்


ADDED : பிப் 24, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதேபூர்: உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் நாய் குரைத்ததால், திருமணம் பாதியிலேயே நின்றுபோன வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உ.பி.,யின் பிரயாக்ராஜை சேர்ந்த தன்யா என்பவருக்கும், கான்பூரை சேர்ந்த சுமித் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. கடந்த 18ம் தேதி, பதேபூரில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன.

எரிச்சல்


முகூர்த்த நேரம் நெருங்கிய சமயத்தில், அதிகாலை 4:00 மணிக்கு நடந்த சடங்கின்போது, மணப்பெண் வீட்டில் வளர்த்த செல்ல நாய் ஒன்று, அங்கு கூடியிருந்த மணமகன் வீட்டாரை பார்த்து ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்தது. இதனால், எரிச்சல் அடைந்த மணமகன் உறவினர் ஒருவர், அந்த நாய் மீது கல்லெறிந்தார்.

ஆவேசமடைந்த மணமகள் வீட்டார், இது பற்றி கேள்வி கேட்க, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஒரு கட்டத்தில், அருகில் கிடைத்த கம்பு, பிளாஸ்டிக் சேர்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில், மூன்று பேரின் மண்டை உடைந்ததால், விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.

இறுதியில் மணமகன் வீட்டார் சமாதானம் அடையாததால், திருமணத்தை நிறுத்துவதாக கூறிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கலைந்து சென்றனர்.

இதனால், செய்வதறியாது திகைத்த மணப்பெண் தன்யா, கண்ணீருடன் வீட்டிற்கு சென்றார். பின், உறவினர்களுடன் சண்டையிட்ட தன்யா, யாரிடமும் சொல்லாமல் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சமாதானம் பேசினார். ஆரம்பத்தில் அவரை ஏற்க தயங்கிய மாப்பிள்ளை வீட்டார், பின் அரவணைத்துக் கொண்டனர்.

கவலை இல்லை


இருவீட்டாருக்கும் இன்னொரு, 'ட்விஸ்ட்' காத்துக் கொண்டிருந்தது. சண்டை சமாதானம் அடைந்ததை சமூக வலைதளத்தில் தன்யா பகிர்ந்து கொண்டார். அதில், 'ஜனவரி மாதமே எங்களுக்கு முறைப்படி திருமணம் நடந்துவிட்டது. தற்போது சடங்குக்காக நடந்த திருமணம் நின்று போனதில் எங்களுக்கு கவலை இல்லை' எனக் கூறியதை கேட்டு இருவீட்டாரும் ஆடிப்போயினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us