sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/'ஓட்டு கேட்டு வர வேண்டாம்': பேனர் வைத்து மக்கள் அதிரடி

'ஓட்டு கேட்டு வர வேண்டாம்': பேனர் வைத்து மக்கள் அதிரடி

'ஓட்டு கேட்டு வர வேண்டாம்': பேனர் வைத்து மக்கள் அதிரடி


ADDED : மார் 21, 2026 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 12:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பத்துார்: 'மயான பிரச்னையை தீர்க்க முன்வராத அரசியல் வாதிகள் யாரும், கிராமத்திற்குள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, மக்கள் 'பேனர்' வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

திருப்பத்துார் மாவட்டம் , நாட்றம்பள்ளி அடுத்த ஆத்துார் குப்பம் பஞ்.,க்குட்பட்ட வெள்ளாளனுார் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள், 1996 முதல் அரசு புறம்போக்கு இடத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த இடத்தை, அதே பகுதியை சேர்ந்த தனி நபர், தனக்கு சொந்தம் என நீண்ட நாட்களாக உரிமை கொண்டாடி வருகிறார். இதனால், இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மக்கள் செல்லும் போதெல்லாம் தகராறு ஏற்படுகிறது. எனவே, மயான இடத்திற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் பிரச்னைக்கு தீர்வு காண முன்வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், 'ஓட்டு கேட்டு யாரும் தயவு செய்து எங்கள் ஊருக்குள் வர வேண்டாம்' என, கிராமத்தில் பேனர் வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us