தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஒரு மரம்; இரு நிறம்: மாமரத்தை பார்த்து வியந்த மக்கள்

ஒரு மரம்; இரு நிறம்: மாமரத்தை பார்த்து வியந்த மக்கள்

ஒரு மரம்; இரு நிறம்: மாமரத்தை பார்த்து வியந்த மக்கள்


UPDATED : பிப் 13, 2026 09:53 AM

ADDED : பிப் 13, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2026 09:53 AM ADDED : பிப் 13, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுாரில் காணப்படும் மாமரத்தில் ஒரு கிளை முழுவதும் பச்சை இலைகளும், மறு கிளையில் இளமஞ்சல் பூக்களும் பூத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கூடலுார் பகுதியில் தனியார் எஸ்டேட், வனப்பகுதிகளில் உள்ள மாமரங்களில் நடப்பு ஆண்டு இலைகள் தெரியாத வகையில் பூக்கள் பூத்துள்ளது. இந்நிலையில், கூடலூர் கோழிக்கோடு சாலை பாலமேடு அருகே உள்ள, தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள, மாமரத்தில் பிரதான இரண்டு கிளைகளில், ஒரு கிளை முழுவதும் பச்சை இலைகள் காணப்படும் நிலையில், மற்றொரு கிளை முழுவதும் இளமஞ்சல் நிறத்தில் மா பூக்கள் பூத்துள்ளன.

பசுமையான தேயிலை தோட்டத்தின் நடுவே, காணப்படும் இந்த மா மரத்தை உள்ளூர் மக்கள், வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கின்றனர்.

மக்கள் கூறுகையில், 'இங்குள்ள, பெரும்பாலான மா மரங்களில் இலைகளே தெரியாத வகையில் மா பூக்கள் பூத்துள்ளது. ஆனால், இந்த மரத்தில் மட்டும், ஒரு பகுதி இலைகளும் மறுபகுதி பூக்கள் பூத்திருப்பது வியப்பாக உள்ளது,'என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us