/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
எம்.பி., ராஜா பேசிய மைக் மீது விளக்கு கம்பம் சாய்ந்தது
/
எம்.பி., ராஜா பேசிய மைக் மீது விளக்கு கம்பம் சாய்ந்தது
எம்.பி., ராஜா பேசிய மைக் மீது விளக்கு கம்பம் சாய்ந்தது
எம்.பி., ராஜா பேசிய மைக் மீது விளக்கு கம்பம் சாய்ந்தது
ADDED : மே 05, 2025 06:31 AM

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் ராஜா பேசிய மைக் மீது, விளக்கு கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை நகர தி.மு.க., சார்பில், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், சின்னக்கடை வீதியில் நேற்று இரவு நடந்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி., பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த கம்பம் சாய்ந்து, ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது.
ராஜா, சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்ததால் காயமின்றி தப்பினார். அதையடுத்து பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து மழையால் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
பலத்த காற்றுடன் மழை பெய்ய பெய்ததால் மேடை அருகே கட்டப்பட்டிருந்த பேனர்கள் கிழிந்ததை அடுத்து கட்சியினர் அவற்றை அகற்றினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.