sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM

4


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சூப்பராக உள்ளது. பாலியல் குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கின்றன. இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு மிக கடும் தண்டனை விதிக்க, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.

டவுட் தனபாலு:

அது சரி... ஏதோ, விஜய் சினிமாவை முதல் நாள், முதல் காட்சி பார்த்துட்டு வெளியில வந்து பேட்டி அளிக்கிற ரசிகர் மாதிரி, 'ஆட்சி சூப்பர்'னு அடிச்சு விடுறீங்களே... தி.மு.க., கூட்டணியில் இருந்து நீங்களா வெளியேறாம, அவங்களா வெளியே அனுப்பிட்டா நல்லாயிருக்கும்னு நினைச்சு இப்படி எல்லாம் பேசுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

----

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:

பா.ஜ.,வில் இருந்து அண்ணாமலை விலகியதால் எந்த நஷ்டமும் இல்லை. உண்மையை சொல்ல போனால், விலகி செல்பவர்களுக்கு தான் நஷ்டம். பா.ஜ., என்பது ஒரு ஆலமரம். இங்கிருந்து வெளியே செல்பவர்களுக்கு தான் நஷ்டம் அதிகமே தவிர, கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும், யாராலும் எந்த காலத்திலும் வராது.

டவுட் தனபாலு:

தென் மாநிலங்களில் உங்க கட்சி, 'வீக்'கா தான் இருக்கு... ஏதோ, அண்ணாமலை வந்து தமிழகத்தில் உங்க கட்சியின் ஓட்டு வங்கியை உயர்த்தினாரு... இப்ப, அவரும் விலகிட்டதால, அடுத்து வர்ற தேர்தல்ல அந்த ஓட்டு வங்கியை அதிகரிச்சு காட்டினால் தான், உங்க கருத்து உண்மையாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

------

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

கூட்டணியால் தான், தி.மு.க., பலமாக இருந்தது. தற்போது, கூட்டணி எதுவும் இல்லாமல் தி.மு.க., தனித்து பலமில்லாமல் நிற்கிறது. ஆனால், நமக்கான கூட்டணி இன்னும் பலமாக இருக்கிறது. எனவே, த.வெ.க., அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாம் செயல்பட்டால், நிச்சயம் மக்கள் ஆதரவை பெற முடியும்.

டவுட் தனபாலு:

கட்சி நிர்வாகிகள் மத்தியில் நீங்க இப்படி பேசிய மறுநாளே, த.மா.கா., தலைவர் வாசன் சைக்கிளை தள்ளிட்டு, உங்க கூட்டணியில் இருந்து வெளியே போயிட்டாரு... பா.ம.க., தலைவர் அன்புமணி, தாமரை இலை தண்ணீர் மாதிரி தான் உங்களுடன் இருக்காரு... அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தலில், கணிசமான இடங்களில் ஜெயித்தால் மட்டுமே அ.தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us