sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஏப் 02, 2026 03:40 AM

Google News

PUBLISHED ON : ஏப் 02, 2026 03:40 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: மதநல் லிணக்க முற்போக்கு கூட்டணி என்கிறோம்; முற்போக்கு தவிர வேறு வழியில்லை. பிற்போக்கு இருக்க முடியாது; அது வேண்டாம் என முடிவெடுத்து, நாம் இங்கே கூடியிருக்கிறோம். என் தொண்டர்களுக்கும், முழு வெற்றிக்கான உழைப்பை கொடுக்க, அன்பு கட்டளையாகவும், சிலருக்கு ஆணையாகவும் பிறப்பித்திருக்கிறேன்.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில், ஏற்கனவே உங்களுக்கு சீட் கொடுக்காம, 'கல்தா' கொடுத்துட்டாங்க... நீங்க இப்படி யாருக்கும் புரியாம பேசி, மக்களை குழப்பிடக் கூடாது என்பதால, தேர்தல் பிரசாரத்துக்காவது உங்களை கூப்பிடுவாங்களா என்பது, 'டவுட்'தான்!



தி.மு.க., நிர்வாகிகள்: எங்கள் கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன், இதுவரை மொத்தம், 12 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, 10 முறை வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், காட்பாடியில் போட்டியிடுகிறார். தற்போது, 87 வயதாகும் அவருக்கு, பிரசார கூட்டத்தில் பழையபடி பேச முடியவில்லை. கோடை காலம் என்பதாலும், தமிழகத்திலேயே வேலுார் அதிகபட்ச வெப்பநிலை கொண்ட பகுதி என்பதாலும், இந்த தேர்தல் பிரசாரம் துரைமுருகனுக்கு சவாலாகவே இருக்கும்.



டவுட் தனபாலு: துரைமுருகன், ஆட்சியிலும், கட்சியிலும் உயர்ந்த பதவிகளை பல வருஷங்களா அனுபவிச்சிட்டார்... அவரது மகன் கதிர் ஆனந்தையும் அரசியல் வாரிசாக்கி, வேலுார் எம்.பி.,யாக்கிட்டாரு... 87 வயசுக்கு மேலயும் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கிறாரா அல்லது அதிகாரம் இல்லாம தன்னால இருக்க முடியாதுன்னு நினைக்கிறாரா என்ற, 'டவுட்'தான் வருது!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதும், ஒரு பொறுப்பில் இருக்கும் போது, மீண்டும் போட்டியிடுவதும் எங்கள் கோட்பாடு இல்லை. வெற்றி பெற்றவர் ராஜினாமா செய்யும் தொகுதியில், மறுபடியும் ஒரு தேர்தல் திணிக்கப்படுவதை தடுக்க, அங்கு இரண்டாவது வந்தவரை தேர்வு செய்ய வேண்டும் அல்லது பதவி விலகுபவரிடம் பணத்தை வசூலித்து தேர்தல் நடத்த வேண்டும்.

டவுட் தனபாலு: எம்.பி.,யாக இருந்தும், எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிடும் திருமாவளவனையும், ரெண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடிகர் விஜயையும் தான், நீங்க போட்டு தாக்குறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், நீங்க சொல்ற யோசனையை தேர்தல் கமிஷன் ஏத்துக்குமா என்பது, ' டவுட்'தான்!






      Dinamalar
      Follow us