
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனை, மனிதகுலம் அனுபவித்துக் கொண்டு
இருக்கிறது.
* தேவையற்ற விஷயத்தில் மனம் ஈடுபட்டால், ஆக்கசக்தி விரயமாகி விடும்.
* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் கொண்ட மனிதனே மகாத்மா. அவனால், உலகமே நன்மை அடைகிறது.
* எப்போதும் தன்னம்பிக்கை கொண்டிருங்கள். அது தெய்வீக சக்தியை நம்மிடம் வரவழைத்து விடும்.
* வாழ்வில் துன்பம் ஏற்படுவதற்கு நம்மிடமுள்ள அறியாமையைத் தவிர வேறு காரணம் இல்லை.
-விவேகானந்தர்