
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்களுடைய கவனத்தை மனதுக்குள் திருப்புங்கள். அப்போது தான் நாம் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
* நியாயமான வழி சிக்கலானதாக இருந்தாலும், எதையும் குறுக்குவழியில் அடைய முயலக்கூடாது.
* கல்வி, செல்வத்தில் உயர்ந்த போதிலும், மனிதநேயமும், அன்பும் உடையவர்களாக இருங்கள்.
* கடமையைச் செய்வது மனிதரின் பொறுப்பு. அதற்குப் பலன் தருவது கடவுளின் பொறுப்பு.
* நல்லதைப் பேசினால் மட்டும் போதாது. அதை செயல்படுத்தினால் தான் ஆன்மிகம் முழுமையாகும்.
- சாய்பாபா