/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
பாரதியார்
/
பிறர் வஞ்சிக்க இடம் தராதீர்கள்
/
பிறர் வஞ்சிக்க இடம் தராதீர்கள்
ADDED : ஜூன் 13, 2009 09:54 AM

<P>* ஒரு முயற்சியைக் கைக்கொண்டால் பிறகு வெற்றியுண்டாகும் வரை எப்போதும் அதிலேயே கண்ணும் கருத்துமாகப் பாடுபட வேண்டும். பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். அதனால், கைகொண்ட பணி முடியும் வரை அதை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழுமூச்சாய் ஈடுபட வேண்டும். <BR>* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். நம்பிக்கையின் லட்சணம் என்பது அம்மனிதனிடம் விடாமுயற்சி என்ற அருங்குணம் இருப்பதே. ஊக்கத்தோடு முயற்சி செய்பவன் அச்செயலில் வெற்றி பெறுவதற்கான வழியை தெய்வமே காட்டும். <BR>* லாபநஷ்டங்களை யோசித்த பின்பே ஒரு துறையில் இறங்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வெறும் யோசனை செய்து செயல்படாமல் இருப்பவர்கள் வீணாக வாழ்ந்து மாய்ந்து போகின்றனர்.<BR>* நீயும் பிறரை வஞ்சிக்க கூடாது. பிறரும் உன்னை வஞ்சிக்க இடம் தரக்கூடாது. பிறர் நம்மை ஏமாற்ற இடம் தருதல் அறிவீனமாகும். மனத்தூய்மை இருந்தால் மட்டுமே வாழ்வில் எல்லாச் சிறப்புகளையும் பெற முடியும். </P>