/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஆதி சங்கரர்

/

பொங்கலோ பொங்கல்!

/

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!


ADDED : ஜன 15, 2012 09:01 AM

Google News

ADDED : ஜன 15, 2012 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தை மாதம் முதல் சூரியன் வடதிசை பயணத்தை துவக்குகிறார். இதை பொங்கலாக கொண்டாடி மகிழ்கிறோம். வடமாநிலங்களில் இதையே மகரசங்கராந்தி என்பர்.

* ''ஒளியுடன் பிரகாசிப்பவனே! செம்பருத்தி நிறம் கொண்ட சூரியனே! இருளின் பகைவனே! பாவங்களைப் போக்குபவனே!'' என்று வியாசர் சூரியனைப் போற்றுகிறார்.

* வெற்றியைத் தருபவனே! வேதத்தின் உ<ட்பொருளே! மந்திரங்களால் போற்றப்படுபவனே! என்று யஜுர் வேதம் சூரியனை சிறப்பிக்கிறது.

* எங்களின் தீவினைகளைப் போக்கி காத்தருள வேண்டும் என்று சாமவேதம் சூரியனிடம் வேண்டுகிறது.

* சூரிய வழிபாட்டை தினமும் செய்தால் ஆத்மபலம், ஆயுள், ஆரோக்கியம், புகழ் கிடைக்கும்.

* சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுவோர் வாழ்வில் சகல சவுபாக்கியங்களையும் பெறுவர்.

* உழைப்பின் பெருமையை உணர்த்துவது பொங்கல். இந்நாளில், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளைத் தெய்வங்களாக எண்ணி நன்றி செலுத்த வேண்டும்.

- ஆதிசங்கரர்