ஷார்ட் நியூஸ்

img

பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை புகழ்ந்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் அறிக்கை வெளியிட்டார். இது காங்கிரசாரை கோபம் அடைய வைத்தது. அவர்கள் சசிதரூரை விமர்சித்து வருகின்றனர்.

img

பீஹார் சட்டசபை தேர்தலின் 2வது கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தியா - நேபாள எல்லை 72 மணிநேரம் மூடப்படுகிறது. தேர்தலுக்காக எல்லையை மூடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

img

எங்களுக்குஎந்தவொரு கட்சி மீது தனிப்பாசம் ஏதும் இல்லை. ஆர்எஸ்எஸ் கட்சி என ஏதும் இல்லை. எந்த கட்சியும் எங்களுடையது அல்ல. கொள்கையை மட்டும் ஆதரிப்போம் என பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

img

இளம் பட்டதாரிகள் சுய ஒழுக்கத்தைப் பேண வேண்டும். பெற்றோர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். பட்டதாரிகள் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி தெரிவித்தார்.

img

பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் ரயில்வே அறிவித்துள்ளது. பலூச் கிளர்ச்சி படையினர் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதால் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.

img

காசாவில் 2014ம் ஆண்டு கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர் ஹதர் கோல்டினின் உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. ஹமாஸின் இந்த நடவடிக்கையானது,அமெரிக்காவின் மத்தியஸ்தின் மேற்பார்வையிலான போர் நிறுத்தத்தின் மிக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

img

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

img

பெல்ஜியத்தில் சந்தேகத்திற்கிடமான டிரோன்கள் ஊடுருவிய நிலையில், ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் உதவிக்கு அனுப்ப பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.இந்த டிரோன்களை ரஷ்யா அனுப்பியிருக்கலாம் என்று ஐரோப்பிய நாடுகளிடையே சந்தேகம்

img

ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன், என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

img

தேர்தலுக்கு பின், நிதிஷ்குமார் வீட்டுக்கு அனுப்பப்பட போகிறார். இதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஏஎன்ஐ பேட்டியில் கூறி உள்ளார்.

img

திருப்பூரில், ஏழு தலைமுறை வாரிசுகளுடன், 101 வது பிறந்த நாளை மூதாட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினர். மகன், மகள் வழி பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி மற்றும் தனது தங்கை வழி குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்பு.

img

ஆசிய கண்டத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மட்டுமல்லாமல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு மாபெரும் கடல் சக்தியாக திகழ்வதாக, 9வது ராணுவ இலக்கிய விழாவில் முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

img

மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணியின் போது, கூச் பேஹர், வடக்கு 24 பர்கானாஸ் பகுதிகளில் வாக்காளர் படிவங்களை டீக்கடைகளில், தெருமுனைகளில் இருந்தவாறு விநியோகித்த 8 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

img

பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா என்ப்வர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். அங்கிருந்து பேட்டி கொடுத்த அவர், ஜாமின் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றார்.

img

கரூரில் 41 பேர் சாவதற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் ஒரு வீட்டிற்கும் ஆறுதல் சொல்லாமல், பார்க்காமல் இருக்கிற அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானம் உள்ளவர். நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள்: துரைமுருகன்

img

ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி வரும் தமது கணவரும், டாக்டருமான ஜெகதீஸ்வரனை மீட்டு தர உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னையைச் சேர்ந்த அவரது மனைவி யாமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

img

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மதம், சாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்காது. காங்கிரசும், ஆர்ஜேடியும் ஜாதி, மதம் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கின்றன: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

img

அந்தமான் நிகோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது, இன்று (நவ.9) நண்பகல் 12.06 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.02 ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

img

புதுடில்லி அருகே குருகிராம் பகுதியில் முன்விரோதம் காரணமாக தந்தையின் பிஸ்டல் துப்பாக்கியால் சக நண்பனை சுட்ட 17 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். குண்டுகாயம் அடைந்த மாணவன் தீவிர சிகிச்சையில் உள்ளான்.

img

கோவாவில் நடந்த அயர்ன்மேன் போட்டியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்தினார். அவருக்கு பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

img

2028 ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

img

உத்தராகண்ட் மாநிலத்தின் 25வது ஆண்டு நிறுவன விழாவில், ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மாநில வளர்ச்சிக்காக செய்த திட்டங்களை அவர் கூட்டத்தில் விளக்கினார்.

img

பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி - 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் 20 முன்னணி நாடுகள் உள்ளன. தென்னாப்ரிக்காவில் நடைபெறும் ஜி - 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

img

நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட தோல்வி அடைந்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுங்கள்: இபிஎஸ்

img

நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியதற்கு பதிலடி

img

தமிழகத்தை எஸ்.ஐ.ஆர்., ஆபத்து சூழ்ந்துள்ளது. பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாக்க, கட்சியினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

img

அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத கழிவுப்பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது சந்திரயான்-3 திட்டத்தின் செலவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

img

பல்வேறு குற்றங்களுக்காக இந்தியா தேடி வரும் பயங்கர குற்றவாளிகள் இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடக்கை இந்திய போலீஸ் மற்றும் உளவுப்பிரினினர் வேண்டுகோள் படி, அமெரிக்க போலீசாரால் எடுக்கப்பட்டு உள்ளது.

img

ஆப்ரிக்க நாடான அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கோலாவின் ஜனாதிபதியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் குறித்து திரவுபதி முர்மு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

img

சிலிகுரி வழித்தடத்தை பாதுகாக்க இந்தியா தனது கிழக்கு எல்லையை இந்தியா- வங்கதேச எல்லையில் 3 புதிய ராணுவ முகாம்களை நிறுவி, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. பாதுகாப்பை பலப்படுத்தி இந்தியா தனது கிழக்கு எல்லையை வலுப்படுத்தியது.

இன்னும் பல டாப் செய்திகளை தினமலர் இணையதளத்தில் படியுங்கள் தினமலர் முதல் பக்கம்