ஷார்ட் நியூஸ்

img

சென்னையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது.

img

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளை அக்.,22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு

img

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

img

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விடிய விடிய வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்தது

img

இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்: அதிபர் டிரம்ப்

img

மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் 20 பேர் உயிரிழந்தனர். கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த, இந்த கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு ஆலை உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

img

கஞ்சா வைத்திருந்ததாக எனது மகன் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் தாக்கியதில் வாயில் ரத்தம் வருகிறது. காலில் காயம் பட்டுள்ளது, என பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

img

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியாகவும், அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தோர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

img

ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்று, அரசு வெளியிட்ட பட்டியலில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை புறக்கணித்திருப்பது ஏன் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

img

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டம் சரியான முறையில் நடக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பிரச்னை உருவாக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது, என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

img

அமெரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஒரு நற்செய்தியாக கலிபோர்னியா மாகாணத்தில், தீபாவளி பண்டிகை, அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

img

மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என இந்தியாவிடம் ஐக்கிய நாடுகள் சபை கேள்வி எழுப்பி உள்ளது.

img

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், அங்கு சென்ற ராணுவத்தினர் சோதனை நடத்தி விட்டு முகாம் திரும்பிய நிலையில், 2 வீரர்கள் மாயமாகினர்.

img

போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 40, ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

img

மஹாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. வழக்கு விசாரணை அக்.,14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

img

கடந்த 2008 ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுத்தது யார் என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும் என மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

img

மியான்மரில் பவுத்த மத விழாவில் ராணுவம் குண்டுமழை பொழிந்ததில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும் என்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

img

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். இந்தப் போர் 2 ஆண்டுகளை கடந்துள்ளது.

img

மஹராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பிரதமர் மோடி, இன்று இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார்.

img

ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்காக அந்த நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

img

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்கு? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

img

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒமர் எம்.யாகிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

img

ஆந்திராவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு. 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. பட்டாசுகளை கையாண்டதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தகவல்.

img

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவத்தினர் 11 பேரும், பயங்கரவாதிகள் 19 பேரும் உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என ராணுவத்தினர் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

img

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களிலும், நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் அக்டோபர் 11ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

img

ஸ்பெயினில் பழமையான 6 மாடி கட்டடத்தை ஹோட்டலாக புதுப்பிக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென கட்டடத்தின் உள்புறம் இடிந்து விழுந்ததில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

img

சைபர் குற்றப்புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் டீயை விட குறைவு. நான் அடிக்கடி டீயின் உதாரணத்தை பயன்படுத்தியே பழகிட்டேன். நாங்கள் வேகமான சீர்திருத்தங்களை செய்து வருகிறோம்: மோடி

img

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயலட்சுமி இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கோரிய நிலையில், வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் பாலியல் புகார் வழக்கில் இருந்து சீமானுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

img

சென்னை அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட், அவரை வழக்கில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.

img

வரும் அக் 14ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்னும் பல டாப் செய்திகளை தினமலர் இணையதளத்தில் படியுங்கள் தினமலர் முதல் பக்கம்