மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு ரேபிஸ் பரவுமா?

ரேபிஸ் தாக்கிய மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு ரேபிஸ் நோய் பரவாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு ரேபிஸ் பரவுவது மிக அரிது என கூறப்படுகிறது.

ஆனால் ரேபிஸ் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மற்றபடி தொடுவதாலோ, ஒரே படுக்கையில் படுப்பதாலோ, மலம், சிறுநீர் போன்றவற்றை தொடுவதாலோ ரேபிஸ் பரவியதாக இதுவரை எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

எனினும், பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர், ஒருவரின் தோல் பகுதி காயத்தின் மீது நேரடியாக பட்டால், ரேபிஸ் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இப்போது வரை இந்தியாவில் மனிதர்களிடையே உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை தவிர, ரேபிஸ் பரவியதாக பதிவாகவில்லை.

ஆனாலும், ரேபிஸ் பாதித்தவர் உடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.