பெண்கள் ஏன் புரதச்சத்தை குறைவாக சாப்பிடுகின்றனர்?
புரதச்சத்து குறைபாடு, பெண்களிடையே மிகவும் பொதுவான விஷயமாக உள்ளது. பல பெண்கள், தினசரி புரத தேவைக்கு ஏற்ற உணவை சாப்பிடுவதில்லை.
ஒவ்வொருவரும் உடல் எடைக்கு ஏற்ப, 1 கிலோவுக்கு 1 கிராம் புரதம் என்ற அளவில் சாப்பிட வேண்டியது அவசியம். தினசரி உணவில், குறைந்தபட்சம் 50 - 60 கிராம் புரதம் இடம் பெற வேண்டும்.
முடி உதிர்தல், சோர்வு மற்றும் பலவீனம், அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றுகள், தசை இழப்பு, பொலிவிழந்த வறண்ட சருமம் போன்றவை புரதச்சத்து குறைவுக்கான அறிகுறிகள்.
நம் உணவுப் பழக்கம் மொத்தமும் இட்லி, தோசை, சோறு, உப்புமா, பூரி என்று கார்போஹைட்ரேட் நிறைந்ததாக உள்ளன.
ஒரு சில சமயங்களில் உணவைத் தவிர்ப்பது, அடிக்கடி விரதம் இருப்பது, புரதத்தின் தேவை பற்றிய புரிதல் இல்லாதது பிற காரணங்கள்.
நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள், சாப்பிட்டதும், வயிறு நிரம்பச் செய்தாலும், அவற்றில், ஊட்டச்சத்து சமநிலையுடன் இருப்பதில்லை.
பருப்பு, கொண்டைக் கடலை, ராஜ்மா, பனீர், உலர் கொட்டைகள், விதைகள், முட்டை, கோழி, மீன் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளன.
ஒவ்வொரு வேளை உணவிலும், குறைந்தது ஒரு புரத உணவாவது இடம் பெறும்படி கவனமாக இருக்க வேண்டும்.