தொடர்ந்து மிட் நைட் பிரியாணி சாப்பிட்டால் என்னவாகும்?
'மிட் நைட் பிரியாணி' என்ற தவறான கலாசாரம், தற்போது இளைஞர்களிடம் பரவலாக காணப்படுகிறது.
இரவு உணவை 7 மணிக்குள் முடித்து விட வேண்டும்.
இரவு பணிக்கு செல்பவர்கள் பலர் உணவை எடுத்துச்சென்று 12:00 மணிக்கு மேல் சாப்பிடுகின்றனர். முடிந்தளவு இதை தவிர்க்க வேண்டும்.
இரவு என்பது நம் அனைத்து உடல் உறுப்புகள் ஓய்வு எடுக்கும் நேரம்.
டிரெண்டிங் காரணமாக நள்ளிரவில் பிரியாணி சாப்பிட்டால், அந்த நேரத்தில் உணவை செரிக்க செரிமான மண்டலம் தயாராக இருக்காது.
அச்சமயத்தில் உண்பதால், துாக்கம் கெடும். செரிமான பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு என பல பிரச்னைகள் ஏற்படும்.
இது தொடர்ந்தால், உடல் பருமன், வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, அல்சர், இரைப்பை கோளாறுகள் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
மேலும், டைப் 2 நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் நோய், ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.
எப்போதாவது ஒருநாள் மிட் நைட் பிரியாணி சாப்பிடுவது தவறில்லை. ஆனால் அடிக்கடி சாப்பிடுவது தவறானது.
இதில், இறைச்சி மற்றும் அரிசியின் அளவைப் பொருத்து பாதிப்புகள் அதிகரிக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.