நீர் கடுப்பு எதனால் ஏற்படுகிறது? எப்படி தடுப்பது?
        
சிறுநீர் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் உருவாவதே நீர்கடுப்பு. 
        
உடலில் ரத்தத்தை வடிகட்டி தீங்கு விளைவிக்கும் தேவையற்ற விஷயங்களை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் ஓய்வின்றி செய்கின்றன. 
        
தண்ணீரை சரியான அளவில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து கிருமித்தொற்று ஏற்படும்.
        
சிறுநீர் கழிக்கும் போது லேசான வலி, எரிச்சல் தோன்றுவது, சிறுநீர் கழித்து முடிக்கும் தருவாயில் அடிவயிற்றில் கனமாக கவ்வுவது போன்ற வலி ஏற்படுவதை நீர்கடுப்பு என்கிறோம். 
        
இளநீர், பழச்சாறு, எலுமிச்சை சாறு அருந்தும் போது நீர்ச்சத்து அதிகரித்து சரியாகலாம். 
        
பயணம் மேற்கொள்ளும் போது பலர் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்தாலும் வெளியேற்றுவதில்லை. 
        
குறிப்பாக, பெண்கள் கழிப்பறை வசதி இல்லை என்றால் தண்ணீரும் குடிக்கமாட்டார்கள், சிறுநீரையும் அடக்கி வைப்பார்கள். இதனாலேயே சிறுநீர்த் தொற்றுக்கு ஆளாகின்றனர்.