நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணமென்ன?
இயல்பாக நம் உடலில் செல் கட்டுப்பாடற்று வளர்ந்து, கட்டிகளாக மாறுவதே புற்றுநோய்.
நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் புகைப்பிடித்தல் தான்.
நேரடியாக புகை நுரையீரலுக்கு செல்வதால் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பவர்கள், மாசுபட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பரம்பரை காரணங்களாலும் இப்பாதிப்பு வர வாய்ப்புண்டு.
நாள்பட்ட இருமல், இருமலில் ரத்தம் வருதல், மூச்சுத்திணறல், காரணமின்றி எடை குறைதல், போன்றவை பொதுவான அறிகுறிகள்.
எனவே, அறிகுறிகள் தோன்றிய துவக்கத்திலேயே டாக்டரிடம் கலந்தாலோசித்து, சிகிச்சை எடுத்தால் குணப்படுத்தலாம்.