இதய நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

80 சதவிகித இதய நோய்கள் தடுக்க கூடியவையே. இவை இரண்டு வகையாக ஏற்படுகின்றன.

ஒன்று... எடை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய், புகை பிடித்தல், சோம்பேறித்தனமான கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் ஆகியவை.

வயது, பாலினம், குடும்ப வரலாறு, மரபியல் ஆகியவை 2வது காரணம். 30 - 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் 10 வருட இதய நோய்க்கான அபாயத்தை மதிப்பிட வேண்டும்.

ஸ்கோர், பிரிவெண்ட், வூ போன்ற விளக்க படங்கள், ஆன்லைன் கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து அடிப்படை கல்வியுடன் குழந்தை பருவத்திலிருந்தே இது குறித்து அறிவுறுத்த வேண்டும்.

இதய நோய் என்பது உடனடியாக உருவாவது இல்லை என்பதால், அபாய கட்டங்களில் உள்ளவர்கள் சரியான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டியது அவசியமானதாகும்.

டாக்டர்கள் அறிவுரைப்படி மருந்துகளை பின்பற்றுவதும் மாரடைப்பில் இருந்து காப்பாற்றும்.