மழைக்கால நோய்களைத் தடுப்பது எப்படி?
காய்ச்சல் வந்துவிட்டால் நிலவேம்பு, அரிசிக்கஞ்சி மற்றும் ஓ.ஆர்.எஸ். எடுத்துக்கொண்டு குணப்படுத்த முடியும்.
காய்கறிகளை பச்சையாக உண்பதைத் தவிர்க்கவும். வேக வைத்து உண்பதால் கிருமிகள் இறந்து போகும்.
குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது, துளசி, சீரகம் போன்றன கலந்து அருந்துவது நல்லது.
முடக்கத்தான் கீரை, துாதுவளை, மணத்தக்காளி ரசம் சூடாக சாப்பிடுவது நல்லது.
சிக்கன் சூப், வெஜிடபுள் சூப் போல திரவ உணவுகள் சிறந்தது.
நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க புரதச்சத்து மிகுந்த அசைவ உணவுகள், பால், பருப்பு வகைகள், முட்டை, தானியங்கள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள் சாப்பிடலாம்.
சுகாதாரமற்ற உணவுகள், ஈக்கள் மொய்க்கும்படி உள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.