குழந்தைகளுக்கு வரும் டைப் - 1 சர்க்கரை கோளாறு ! பெற்றோர் உஷார்!
குழந்தைகளுக்கு பலவித மரபியல் காரணிகளால் 'டைப் - 1' சர்க்கரை கோளாறு வரலாம். இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில், செல்கள் பாதிப்பதால் வரும்.
அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல், பலவீனம், சோர்வு, அதிக பசி, தோல், சிறுநீர் சார்ந்த தொடர் தொற்றுநோய்கள், இதன் ஆரம்ப அறிகுறிகள்.
அதற்கான அறிகுறிகள் தெரிந்தால் கவனிப்பது மிகவும் அவசியம். தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், எதிர்பாராத சமயத்தில் தான் தீவிர பாதிப்புகள் வெளிப்படும்.
ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் குழந்தைகளை, 'டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ்' என்று அழைக்கபடுவர்.
காலையில் சுய நினைவுடன் இருந்த குழந்தையின் நிலை மாலையில் மோசமாகலாம்.
சோர்வு, அசவுகரியமாக இருந்த குழந்தையை கவனித்து, உடனடியாக சிகிச்சை செய்திருந்தால், மருந்துகள் கொடுத்து தீவிரத்தை குறைக்க முடியும்.
குழந்தையிடம் தெரியும் சிறிய மாறுதலையும் கவனிக்கும் பெற்றோர் உடனடியாக டாக்டரிடம் அழைத்து வந்து, என்ன வேறுபாடு தெரிகிறது என்பதை துல்லியமாக சொல்ல வேண்டும்.
தீவிர பாதிப்பாக இருந்தாலும், முறையான சிகிச்சை தந்து சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.